வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடி

291

தூத்துக்குடியில் வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மட்டக்கடையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

மோசடியில் ஈடுபட்ட வங்கியின் நகை மதிப்பீ்ட்டாளர் சண்முகசுந்தரத்தை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, கைது செய்யப்பட்ட சண்முகசுந்தரத்திடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த மோசடியில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of