சாத்தான்குளம் சம்பவம் – காத்தி்ருப்போர் பட்டியலில் இருந்த SP-க்கு புதிய பதவி

758

சாத்தான் குளம் தந்தை – மகன் மரணத்தையடுத்து காத்தி்ருப்போர் பட்டியலில் இருந்த தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 9 – ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்படி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தொடர்ச்சியாக காவல்துறையினர் அத்துமீறல், தந்தை – மகன் சித்ரவதை கொலை,பேய்க்குளத்தில் இளைஞர் விசாரணையில் மரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து எஸ்.பி. அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது சென்னை  சைபர்கிரைம் எஸ்.பி.யாக அருண்பாலகோபாலன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.இதேபோல, ஓம்பிரகாஷ் மீனா, நிர்வாகப்பிரிவு  ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி மாற்றப்பட்டுள்ளார்.

வண்டலூர் போலீஸ் அகாடமி எஸ்.பி.யாக ஜெயலெட்சுமி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிலஅபகரிப்பு தடுப்புப்பிரிவு காவல்துறை எஸ்.பியாக, கமாணோடோ பிரிவு எஸ்.பி சியாமளாதேவி மாற்றப்பட்டுள்ளார்.

சென்னையில் மத்தியக்குற்றப்பிரிவு இணைஆணையராக கண்ணம்மாள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement