தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் – 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

683

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of