தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நிர்வாக பரிமாற்றம் மேற்கொள்வதற்கு போராட்டம்

356
horbor-protest

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் தானியங்கி முறையில் சரக்கு மற்றும் நிர்வாக பரிமாற்றம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் நுழைவாயில் பகுதிகளில், துறைமுக தொழிலாளர்களை அப்புறப்படுத்திவிட்டு, தானியங்கி முறை மூலம் சரக்கு மற்றும் நிர்வாக போக்குவரத்தினை மேற்கொள்ள துறைமுக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த முடிவினைக் கைவிடக் கோரியும், துறைமுக அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் நுழைவாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தூத்துக்குடி துறைமுகத்திற்குள் செல்ல வேண்டிய சரக்கு வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

தொழிலாளர்கள் போராட்டத்தால் தூத்துக்குடி துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.