சொந்த வீட்டிலேயே திருடிய மனைவி – மனமுடைந்த கணவன் தற்கொலை

133

தூத்துக்குடியில், சொந்த வீட்டிலேயே நகையை திருடி விட்டு, மனைவி நாடகமாடியதால் மனமுடைந்த கணவன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் பெரிய செல்வம் நகரை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி ஜான்சி. கடந்த மூன்றாம் தேதி தனது வீட்டில் இருந்த நகைகளை மர்மநபர் கொள்ளையடித்து சென்று விட்டதாக மனைவி ஜான்சி, காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மனைவி ஜான்சியே தனது வீட்டில் இருந்த நகைகளை எடுத்து மறைத்து வைத்துவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடினார் என்பது தெரியவந்தது.  இதனால் ஜான்சியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான கணவர் வின்சென்ட் நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of