”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்?

1177

முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார்.  இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளிட்டுள்ளார்.

இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997ல் தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றது.

தோப்பில் முகமது மீரான் என்பவர்  செப்டம்பர் 26, 1944 ல் பிறந்தார். தமிழ், மலையாள எழுத்தாளரான இவர், 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.”கூனன் தோப்பு”, ஒரு கடலோர கிராமத்தின் கதை” சாய்வு நாற்காலி” ஆகிய நாவல்கள் இவரின் படைப்புகளில் தனித்துவம் வாய்ந்தவை

சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார். இதே போன்று,தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, இலக்கியச் சிந்தனை விருது,லில்லி தேவசிகாமணி விருது,தமிழக அரசு விருது,அமுதன் அடிகள் இலக்கிய விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது  ஆகிய விருதுகளை பெற்றார்.

தமிழுக்காக அவர் ஆற்றிய பணிகளும், அவரின் எழுத்துக்களில் வந்த படைப்புகளும் தமிழ் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அப்படிப்பட்ட ஒரு நபர்  நேற்று நள்ளிரவு உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

தமிழுக்கு சிறப்பாக தொண்டாற்றிய தோப்பில் முகமது மீரானின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு தான்…

– எழுதுகோல் கர்ஜனை

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of