நேர்மையை நோக்கி பயணிப்பவர்கள் தன்னுடன் நிச்சயம் இணைவார்கள் – கமல்ஹாசன்

103

சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் ஊடங்கங்களின் தலைமை செய்தி ஆசிரியர்களை கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், அதிமுக, திமுக அல்லாத கட்சிகளோடு தான் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.

மக்கள் நீதி மய்யம் தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என்பது இல்லை, ஆனால் தங்களுடைய தலைமையில் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்துடன் கூட்டணி குறித்து பேசிய கமல்ஹாசன், தமிழகத்தின் மேம்பாடு என்கிற அடிப்படையில் நானும், ரஜினியும், கருத்துகளை கூறி வந்தோம் என்றும் நேர்மையை நோக்கி யார் பயணிக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் இணைவார்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of