அலங்காநல்லூரில் 17ந் தேதி ஜல்லிக்கட்டு – ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்கள் முன்பதிவு

292

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 17-ந் தேதி மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அன்றில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

நடந்த முன்பதிவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், 55 கிலோ எடை அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்  என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தனர்.