இன்று மாலைக்குள் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் – உணவுத்துறை அமைச்சர்

467

தமிழகம் முழுவதும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி இன்று மாலைக்குள் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் கொரோனா நோய் தொற்று கிருமிநாசினி தெளிப்பான் அரங்கத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 79.48 சதவீதம் பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு விட்டதாகவும், இன்று மாலைக்குள் மீதமுள்ளவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்து வருவதாக குறிப்பிட்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of