இளைஞரை விறகு கட்டையால் அடித்துக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

346
murder

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ளள்ள சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பசுபதி என்பவர், காரியாப்பட்டிக்கு சென்று கோழிகளுக்கு தேவையான தீவனங்களை வாங்கி வந்தபோது, முட்புதரில் மறைந்திருந்த மர்ம நபர்கள் விறகு கட்டைகளால் பசுபதியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

இதில், பலத்த காயமடைந்த பசுபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சொக்கம்பட்டியை சேர்ந்த திருமலை, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நாகராஜ் மற்றும் உதயக்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதனையடுத்து மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.