சரக்கு ரயில்கள் மோதல்: விபத்தில் 3 பேர் பலி

207

மத்திய பிரதேசம் சிங்ரவ்லி மாவட்டத்தில் நேற்று காலை இரு சரக்கு ரயில்கள நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், ரயில் இன்ஜின் ஓட்டுனர்கள் இருவர் உட்பட மூவர் இறந்தனர்.

விபத்து குறித்து, சிங்ரவ்லி மாவட்ட போலீசார் கூறியதாவது:ம.பி.யில் உள்ள அம்லோரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயில் உ.பி. நோக்கி சென்று கொண்டு இருந்தது.

சிங்ரவ்லியை அடுத்த கான்ஹாரி கிராமம் அருகே எதிரே காலியாக வந்த மற்றொரு சரக்கு ரயில் மீது நிலக்கரி ஏற்றி சென்ற ரயில் நேற்று காலை, 4.40மணிக்கு மோதியது.

இதில் ஒரு ரயிலின் இன்ஜின் மற்றும் 13 பெட்டிகள் தடம் புரண்டன. விபத்து நடந்த இடத்தில் மூன்று உடல்களை மீட்டுள்ளோம்.

இதில் இருவர் இன்ஜின் ஓட்டுனர்கள், ஒருவர் பணியாளர் என கருதுகிறோம். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement