இலங்கையில் மேலும் மூவர் கையெறி குண்டுகளுடன் கைது

349

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு வாகன சோதனை, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை ஆகியோர் மேற்கொண்ட சோதனையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள் மற்றும் 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of