அமெரிக்காவில் வங்கியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

492

அமெரிக்காவில் எளிதில் துப்பாக்கி உரிமம் பெற முடியும் என்பதால், பெரும்பாலானவர்களிடம் துப்பாக்கிகள் உள்ளன. இதனால் அங்கு நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று ஒக்கிகோ மாகாணத்தில் உள்ள தனியார் வங்கியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுட்டதில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்றும், எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of