ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் 3 காவல் அதிகாரிகளை கடத்தி கொலை

678

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 காவல் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளதால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஜம்முகாஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் சிறப்பு படை பிரிவு போலீஸ் அதிகாரிகள் 3 பேர் மற்றும் ஒரு காவலர் இன்று அதிகாலை திடீரென மாயமாகினர். காவல்துறையை சேர்ந்த 4 பேரையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அவர்களை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், அவர்களில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. முன்னதாக, பந்திப்போரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியை, பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். இதையறிந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு, ராணுவத்தினரும் கடுமையாக பதிலடி கொடுத்தனர்.

பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் அங்கு பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.

ஏற்கனவே எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கழுத்தை அறுத்து தீவிரவாதிகள் கொலை செய்தனர். இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்தை நடைபெற உள்ளநிலையில் தீவிரவாதிகளின் இந்த அட்டூழியத்தால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

Advertisement