அமெரிக்க தூதரகம் – மூன்று ஏவுகணை தாக்கியதால் பரபரப்பு

419

அண்மையில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஈராக் நாட்டின் இரண்டாவது சக்தி வாய்ந்த நபராக கருதப்படும் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த நிகழ்விற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு பின், இரு நாட்டு அதிபர்களிடையே மிக பெரிய கருத்து மோதல் ஏற்பட்டது, இந்த கருத்து மோதலால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது, ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று அமெரிக்க தூதரக அலுவலகத்தின் வளாகத்திற்குள் மூன்று ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்து சிதறியதாகவும் இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு குறித்து அமெரிக்கா அளித்த அறிக்கையில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு போராளிகள் 14கிற்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவித்தது.