தலயா..? தளபதியா..? பளிச்சென்று சொன்ன த்ரிஷா..! குஷியில் ரசிகர்கள்..!

2258

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. ஹீரோயினாக நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை ஹீரோயினாக மட்டும் நடிக்கும் ஒரு சில நடிகைகளில் இவரும் ஒருவர். அஜித் மற்றும் விஜய் உட்பட பல்வேறு முக்கிய ஹீரோக்களுடன் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் தான் என்றும், நேர்கொண்ட பார்வை போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் அவர் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார். மேலும் அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் எனவும் திரிஷா கூறினார்.