தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

1144

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என, சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓசூர், உதகமண்டலத்தில் தலா 2 செ.மீ மழையும், உதகை, குமரி, கூடலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், வெயிலின் தாக்கம் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement