டிக்-டாக் App-க்கு ஆப்பு! இளைஞர்கள் அதிர்ச்சி!!

553

டிக்-டாக் என்ற செயலியின் மோகம் தற்கால இளைஞர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இந்த செயலியில் இளைஞர்கள், தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் வசனங்களுக்கு ஏற்றவாறு நடித்து, அந்த வீடியோக்களை வெளயீட்டுக் கொண்டு வருகின்றனர். இதில் சிலர் ஆபாசமான வீடியோக்களையும் வெளியிடுகின்றனர்.

இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாக, புகார் எழுந்திருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில், டிக்-டாக் செயலியை தடை செய்வது குறித்து எம்.எல்.ஏ.தமீமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மணிகண்டன், மாணவர்களின் நலன் கருதி, டீக்-டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதேபோன்று புளு வேல் என்று ஆன்லைன் விளையாட்டும் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of