ரயிலில் கழிவறைக்கு சென்ற இளம்பெண்.. டிக்கெட் பரிசோதகரின் படுபாதக செயல்..

1367

சென்னை கொளத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, கோவையில் இருந்து சென்னைக்கு அதிவிரைவு ரயில் மூலம் வந்துக்கொண்டிருந்தார்.

ரயில் இன்று அதிகாலை அரக்கோனம் ரயில்வே நிலையத்தை வந்தடைந்தபோது, ரயிலில் உள்ள கழிவறைக்கு அந்த இளம்பெண் சென்றுள்ளார். திடீரென, உள்ளே சென்ற மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, மற்ற பயணிகள் கழிவறை அருகில் வந்துள்ளனர்.

அப்போது, டிக்கெட் பரிசோதகர் மாணவியை ஆபாசமாக படம் பிடித்ததது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை கைது செய்த காவல்துறையினர், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.