வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது

183

சென்னை, திருச்சியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

சென்னை, திருச்சியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. சென்னை – டெல்லி, சென்னை – சாப்ரா, திருச்சி – ஹவுரா ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.

செப்டம்பர் 12ம் தேதி முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே வாரியம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.