அரசின் சட்டத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு – டிக்-டாக் நிர்வாகம்

292

இந்திய அரசின் சட்டத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக டிக்-டாக் செயலி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்றான டிக்டாக் செயலிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டு, பின்னர் தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் டிக்-டாக் செயலி குறித்து வந்த புகார்களை அடுத்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம், டிக்டாக் மற்றும் ஹலோ பைட்டேன்ஸ் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 24 கேள்விகள் அடங்கிய அறிக்கையை அனுப்பிய மத்திய அரசு, உரிய பதிலளிக்காவிட்டால், செயலிக்கு தடை விதிக்கப்படும் என எச்சரித்தது. ஜூலை 22ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நிலையில் டிக்டாக் மற்றும் ஹலோ நிறுவனங்கள் உடனடியாக பதில் அளித்துள்ளன. இந்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவோம் எனவும் டிக்டாக் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of