டிக் டாக் செயலியின் உச்சக்கட்ட கொடுமை – இறந்த கோலத்தில் டிக் டாக்கில் பதிவிட்ட பெண்

1040

டிக் டாக் செயலியின் உச்சக்கட்ட கொடுமையாக, இறந்த கோலத்தில் டிக் டாக்கில் பதிவிட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண்ணை சரமாரியாக திட்டி கருத்துகளும் பதிவிடப்பட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

சமூக சீரழிவுக்கு காரணமாக டிக் டாக் செயலியை தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகமாக டிக் டாக் செயலிக்கு பலரும் அடிமையாகி, ஒரு கட்டத்தில் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு சென்றுவிடுகின்றனர். பெண்கள், குழந்தைகள், குடும்பத் தலைவிகள் இளைஞர்கள், முதியவர்கள் என யாரையும் டிக்டாக் மோகம் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் புதிய உச்சமாக, சமூக வலைதளங்களில் வலம் வரும் ஒரு டிக் டாக் வீடியோ அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு முன்பாக மேஜையில் கிடத்தி வைப்பது போன்ற கோலத்தில் டிக் டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண்ணை நெட்டிசன்கள் சரமாரியாக திட்டி கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இன்னும் என்னென்ன கொடுமைகளை பார்க்க போகிறோமோ என்று நெட்டிசன்கள் புலம்புகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of