ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய ”டிக்டாக்” நண்பர்கள்

479

டிக்டாக் செயலி மூலமாக ஒருங்கிணைந்த நண்பர்கள் திருப்பூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி அசத்தினர்.

 

டிக்டாக் செயலி மூலமாக பல்வேறு கலாச்சார சீரழிவுகள் நடைபெறுவதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வரும் நிலையில், திருப்பூரைச் சேர்ந்த சிலர்,  டிக் டாக் செயலி மூலம் ஒன்றிணைந்தவர்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே திருப்பூர் மகாத்மா அன்பு இல்லத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரியாணி பரிமாறினர். மேலும் இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் மேம்படுத்தி கட்டுவதற்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்தனர். டிக் டாக் மூலம் இணைந்த ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Advertisement