டிக்-டாக் பயணாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு! நிறுவனத்தின் அறிவிப்பு!

670

டிக்-டாக் என்ற செயலியின் மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டு வருகிறது.

இந்த செயலியின் மூலம், பிரபல நடிகர்கள் அல்லது நடிகைகள் பேசிய வசனங்களை, நாம் பேசுவது போல் வீடியோ தயார் செய்ய முடியும். ஆனால் தற்போது இந்த செயலியை பலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அமெரிக்கா, சீனா போன்று இந்தியாவிற்கும் புதிய பாதுகாப்பு வழிமுறைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு மையத்திற்கு என்று தனிப்பக்கம் துவக்கப்பட்டு அதில் இந்தியாவில் முக்கிய 10 மொழிகளில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழும் அடக்கம்.

இந்த புதிய பாதுகாப்பு வசதியின் மூலம் பயனாளர்கள் தங்கள் கடவுச்சொல், தங்கள் பக்கங்களை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது, தங்கள் காணொளிகளை யார் யாரெல்லாம் பார்க்கமுடியும் மற்றும் எந்த வயதுடையோர் பார்க்கமுடியும் என்றெல்லாம் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Advertisement