13 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய டிக்-டாக்?

368

டிக்-டாக் என்ற செயலி தற்போது இளைஞர்களிடம் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த செயலிக்கு இளைஞர்கள் அடிமையாகி விட்டார்கள் என்றே கூட செல்லலாம்.

இந்த செயலியை பயன்படுத்தி சிலர் ஆபாசமான வீடியோக்களையும் வெளியிடுவதாக புகார் எழுந்தது. இதனால் இந்த செயலியை தடை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்நிலையில் டிக்டாக் செயலி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது, அது என்னவென்றால் அமெரிக்காவில் உள்ள குழுந்தைகளின் ரகசிய தவல்களை அவர்களின் பெற்றோர்களின் அனுமதியின்றி பெற்றதாக டிக்டாக் செயலி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அமெரிக்காவில் 13வயதுகுட்பட்ட சிறுவர்களிடம் அவர்களின் தனிப்பட்ட விவரத்தை சேகரிக்கும் போது அவரவர்களின் பெற்றோர்களின் அனுமதியையும் வாங்க வேண்டும்.

ஆனால் அந்த விதியை டிக்டாக் செயலி கடைபிடிக்கவில்லை என்றும் விதியை மீறி குழந்தைகளின் தகவல்களை திரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம் டிக்டாக் செயலிக்கு இந்திய மதிப்பில் சுமார் 40கோடி ரூபையை அபராதமாக விதித்துள்ளது.

மேலும் டிக்டாக் நிறுவனம் சார்பில் தற்சமயம் அறிக்கை வெளியடப்பட்டுள்ளது, அது என்னவென்றால் 13வயதுக்குட்பட்டவர்களுக்காக பெற்றோர்களால் கட்டுப்படுத்தும் வசதியோடு புதிய செயலி உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of