இடையூறாக உள்ள “டிக்-டாக்” செயலியை தடை செய்வது தவறில்லை – முதலமைச்சர்

176

பலருக்கும் இடையூறாக உள்ள டிக்-டாக் செயலியை தடை செய்வது தவறில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்களை பாதுகாப்பதற்காக NIA-விற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

வேலூர் தேர்தலில் அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளதாகவும், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கூறி தி.மு.க வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டினார்.

தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத தி.மு.க எந்த வாக்குறுதியை அளித்து வாக்கு கேட்பார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of