550 கோடி மணிநேரத்தை வீணடித்த இந்தியர்கள்

371

டெல்லி: இந்தியாவில் வாழும் மக்கள் கடந்த ஆண்டு மட்டும் 550 கோடி மணிநேரம் டிக்டாக் செயலியில் செலவழித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Image result for tik tok"

பிறந்த குழந்தை முதல் முதுமை நிறைந்த பாட்டி வரைக்கும் டிக்டாக் செயலிக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் லைக்குகள் எதற்கும் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தும் டிக்டாக்லேயே மூழ்கிவிடுகின்றனர். பேஸ்புக், வாட்ஸ்ஆப் என சமூக செயலிகள் பல இருந்தும் டிக்டாக் பயன்படுத்தும் இந்தியர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

Image result for tik tok"

அனைத்து செயலிகள் “ஆப் அன்னி” என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில் 2019ல் இந்தியாவில் அதிக நேரம் செலவிட்ட செயலிகளில் டிக்டாக் முதலிடத்தில் உள்ளது. 2018ம் ஆண்டு 90 கோடி மணிநேரம் டிக்டாக் செயலியில் கழித்த இந்திய மக்கள், கடந்தாண்டு 550 கோடி மணிநேரம் செலவழித்துள்ளனர். அதே காலக்கட்டத்தில் பேஸ்புக் செயலி 15 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.