டிக்-டாக் வீடியோ போட்ட மனைவி! மனைவியை போட்டுத்தள்ளிய கணவன்!

2030

மனைவி தொடர்ந்து டிக்-டாக் வீடியோக்களை பதிவிட்டதால், ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அறிவொளிநகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்.

இவரும் இவரது மனைவி நந்தினியும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக நந்தினி அதிகமாக டிக்-டாக் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ், நந்தினி பணிபுரியும் கல்லூரிக்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியை குத்தி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கனகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of