இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் – இங்கிலாந்து இளவரசர்

811

இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் “இந்தியா குளோபல் வீக்” என்னும் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில், அந்நாட்டின் இளவரசர் சார்லஸ், காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார்.

அப்போது, இந்தியாவின் நிலையான வாழ்க்கை முறையை புகழ்ந்துரைத்த அவர், கொரோனா காலத்தில் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

நிலையான வாழ்க்கை என்பதன் முக்கியத்துவம் குறித்து, தான் பிரதமர் மோடியுடன் பேசியதாக குறிப்பிட்ட சார்லஸ், இந்தியாவிடம் இருந்து பண்டைய யோக ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.