திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், முத்துப்பேட்டை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

190
schools

புயல் சீரமைப்பு பணி காரணமாக, நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கும், மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளன. இதனால் குடிநீர் விநியோகம் உள்பட அடிப்படை தேவைகள் பாதிக்கப்பட்டது.

இதனை தொடந்து மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயலின் தாக்கத்திலிருந்து மீள்வதற்குள், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று விடிய, விடிய கன மழை பெய்தது.

கனமழை பெய்ததால் பொதுமக்களின இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், முத்துப்பேட்டை பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here