திருப்பதியில் லட்டு வழங்கும் கவுண்டரில் முறைகேடு

586

திருப்பதியில் லட்டு வழங்கும் கவுண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து ஒப்பந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பதியில் நாள்தோறும் ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர். அங்கு வருபவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லட்டு வழங்கும் கவுண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ரூபாய்10 லட்சம் மதிப்பிலான 16 ஆயிரம் லட்டுகள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து திருப்பதி ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement