துணிக்கடை அதிபர் வீட்டில் 30 லட்சம் மதிப்புள்ள நகை பணம் கொள்ளை

346
Tirupur-Robbery

திருப்பூர் அருகே துணிக்கடை அதிபரின் வீட்டில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். ஜவுளிக்கடை உரிமையாளரான இவர், தனது மனைவியுடன் திருப்பூர் சென்றுள்ளார்.

கடந்த சனிக்கிழமை சென்ற ராமலிங்கம், நேற்றிரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து 8 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கொள்ளை நடந்த ராமலிங்கத்தின் வீடு காவல் நிலையத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.