உடம்பெல்லாம் ரத்தம்.. கட்டிங் வேணும்.. போதையில் அட்டகாசம் செய்த இளைஞர் – வைரல் வீடியோ!

499

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இளைஞர் ஒருவர் தண்ணி அடிக்க வந்துள்ளார்.

போதை தலைக்கேறியதும் திடீரென பாட்டிலை உடைத்து தன்னை தானே உடம்பில் குத்தி கிழித்து கொண்டார். இதில் அவரது தோள், நெஞ்சு பகுதி, கைகளில் ரத்தம் கொட்டியது.பிறகு தள்ளாடி கொண்டே வெளியே வந்த அந்த இளைஞர் மதுக்கடைக்கு போவோர் வருவோரிடம் தற்கொலை செய்து கொள்ள போவதாக சொன்னார். எனக்கு ஒரு குவார்ட்டர் வாங்கி தாங்க எனக்கு அம்மா, அப்பா இல்லை பொண்டாட்டி, புள்ளைங்க இல்லை. எனக்கு வாழவே பிடிக்கல என்று தள்ளாடி நடந்தவாறே சொன்னார். இதை கண்டு பொதுமக்கள் நடுங்கினர்.

மற்றொரு புறம் அங்கிருந்த போலீசாரும் இளைஞரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும் இளைஞர் பிடிகொடுக்கவில்லை. குவார்ட்டர் வாங்கி தந்தால் ஆம்புலன்சில் ஏறுவேன் என்றார். இதனால் போலீசார் அவரிடம் பேசி ஆம்புலன்ஸில் ஏற்றி பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து ஆஸ்பத்திரியில் நடத்திய விசாரணையில் இவர் பெயர் மூர்த்தி என்று தெரியவந்தது. மூர்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மூர்த்திக்கு போதை கொஞ்சம் கொஞ்சமாக தெளிய ஆரம்பித்தது.

இதனால் எங்கே போலீசார் தம்மை கைது செய்துவிடுவார்களோ என்று பயந்து ஆஸ்பத்திரியில் இருந்து தலைமறைவாகிவிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of