ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

96

திருவள்ளூர் மாவட்டம்  தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான  தடை செய்யப்பட்ட குட்கா  பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கவரப்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநர் ஆதிகேசவனை கைது செய்தனர்.