காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்லி புயலாக மாறியுள்ளது, நாளை காலை கரையைக் கடக்க வாய்ப்பு

617

ஒடிசா அருகே வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்லி புயலாக மாறியுள்ளது. இந்த புயல் நாளை காலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம் கோபால்பூரில் இருந்து 510 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும், ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்தில் இருந்து 460 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும் மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “டிட்லி” புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Titli

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டி அமைந்துள்ள கோபால்பூர் – கலிங்கபட்டினம் இடையே நாளை காலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காணமாக ஒடிசாவில் கனமழை பெய்யும் என்றும், ஆந்திராவில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 90 முதல் 100 கிலே மீட்டர் வேகத்திற்கு இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து ஓடிசா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. டிட்லி புயல் காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், ராமேஸ்வரம் உள்ளிட்ட துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இன்று ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement