மின்னல் வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ்..! – சிறுவனின் உயிரை காக்க எடுத்த த்ரில்” முயற்சி..!சினிமா பாணியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

1049

இராமாநாதபுரத்திலிருந்து 356 கி.மீட்டர் தொலைவுள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிறுவனின் உயிரை காக்க அதிவேகத்தில் ஆம்புலன்ஸை இயக்கிய ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

சென்னையில் ஒருநாள் என்ற படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. அதில் ஒரு குழந்தையின் உயிர்காக்க எடுக்கும் முயற்சியை வைத்து படமாக்கப்பட்டிருந்தது. அதே முயற்சியை தான் தற்பொழுது தமுமுக அமைப்பினர் எடுத்து வெற்றி கண்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தை சேர்ந்த கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனை Emergency’யாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இராமநாதபுரத்திலிருந்து கொண்டு செல்ல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்(தமுமுக) ஆம்புலன்ஸை அழைத்திருந்தனர்.

இராமநாதபுரம் கிழக்கு தமுமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனையின் அடிப்படையில் இராமநாதபுரத்திலிருந்து புறப்பட்ட தொண்டி தமுமுக ஆம்புலன்ஸை ஓட்டுனர் ஜாஸ் அதிவேகமாக இயக்கினார்.

தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹிம், காரைக்கால்,நாகை வடக்கு, கடலூர் தெற்கு, கடலூர் வடக்கு, புதுச்சேரி தமுமுக மாவட்ட நிர்வாகிகள், தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்,NH45 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சங்கம்,ஓட்டுனர் சங்கம், காவல்துறை,சமூக ஆர்வளர்கள் ஆகியோர் உதவியுடன் ECR வழியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றடைந்தது.

இந்த அதிவேக பணியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 10க்கும் மேற்ப்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டிருந்தது. 

 356 கி.மீ தொலைவை வெறும் 4 1/2 மணி நேரத்தில் ஒரு சிறுவனின் உயிரைக் காக்க தன்னுயிரையும் பணயம் வைத்து ஆம்புலன்ஸை அதிவேகமாக இயக்கிய தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாஸ் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.