தமிழக சட்டப்பேரவையின் `2020’ கூட்டத் தொடர் எப்போது? – தேதியை அறிவித்த சட்டப்பேரவை செயலாளர்

600

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 6-ம் தேதி தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஜனவரி 6ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் பேரவை கூடுவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

ஆளுநர் உரையுடன் அன்றைய சட்டசபை நிகழ்வு நிறைவடையும். அதன்பின்னர் சபாநாயகர் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். அப்போது, சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.