மருத்துவ சேர்க்கை – 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்

262

சென்னை தலைமைச்செயலத்தில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து துறைகளின் அமைச்சர்கள்,அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கொரோனாவுக்கு சிகிச்சைபெறுவதால் இந்தக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்தக்கூட்டத்தில், ஊரடங்கு தளர்வால் ஏற்பட்டுள்ள விளைவுகள், சென்னை தவிர பிறமாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள்,பத்தாம்வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவது, கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும், தமிழகத்தில் அமல்படுத்தவேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் இந்த அமைச்சரவைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், 5 ஆயிரம் கோடியில் முதலீடுகள் செய்யும் தொழில் நிறுவனங்களுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில்  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of