ஹைட்ரோ கார்பன் விவகாரம்: பிரதமருக்கு தமிழக முதல்வர் பரபரப்பு கடிதம்..!

2614

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மக்கள் கருத்தை கேட்க தேவையில்லை என்ற அறிவிக்கையை திரும்ப பெற வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து எந்த கருத்தும் மக்களிடம் இனி கேட்க தேவையில்லை என கூறி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிக்கைக்கு தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சியின் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்புகள் வலுத்துவருவதாக தெரிவித்தார். இவ்விவகாரத்தில் மாநில அரசின் கருத்தையும் கேட்கவில்லை.

வரைவை வெளியிட்டு கருத்தை கேட்காமல் நேரடியாக அறிவிக்கை வெளியிட்டிருப்பதை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார். மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

Advertisement