“வரும் 17-ஆம் தேதி..” – இ-பாஸ் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்..!

536

வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. முக்கிய பணிகளுக்கு வெளியே செல்வோருக்கு மட்டும் இ-பாஸ் வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.

ஆனால், இந்த இ-பாஸ் பெறுவதற்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அரசு வைத்திருந்தது. இதன்காரணமாக, பலரால் இ-பாஸ் பெற முடியவில்லை என்று கூறப்பட்டது. இதுமட்டுமின்றி, இ-பாஸ் முறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், முதலமைச்சர் பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரும் 17-ஆம் தேதி முதல் ஈ-பாஸ் முறையில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆதார் அல்லது ரேஷன் கார்டு அட்டை நகலுடன் இ-பாஸ்க்கு விண்ணப்பித்தால், உடனடியாக வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement