தமிழக முதல்வர் 3 மாவட்டங்களுக்கு பயணம்..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..?

426

கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக வரும் 15ஆம் தேதி கிருஷ்ணகிரிக்கும், 16ஆம் தேதி சேலத்திற்கும், 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கும் முதலமைச்சர் பழனிசாமி செல்ல உள்ளார்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, வணிக வளாகம் கட்டுவதற்கும், மாவட்ட கருவூல அலுவலகம் கட்டுவதற்கும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார்.

அதைதொடர்ந்து ஈரோடு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் பி.சி.ஆர் பரிசோதனை மையத்தையும் திறந்துவைக்க உள்ளார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of