ரயிலில் சரக்கு கட்டணம் விலக்கு அளிக்க ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

504

கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் நிவாரண பொருட்களுக்கு ரயிலில் சரக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கஜா புயலால் டெல்டா பகுதியின் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயலில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், தங்கள் வாழ்வாதரங்களையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நாடு முழுவதிலும் இருந்து நிவாரணப்பொருட்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே கேரள வெள்ளத்தின்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை போல், ரயில்களில் அனுப்பப்படும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement