“ஒரே நாளில் 1100 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு” – “சென்னையில் மட்டும் 967..!

333

தமிழகத்தில் நேற்று 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் நேற்று மட்டும் 964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதன்படி, சென்னையில் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக கடந்த 15 நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்த மே 18ம் தேதி வரை சென்னையில் மொத்தம் 7117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சென்னையில் 500க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மே 31ம் தேதி 803 பேருக்கும், நேற்று 964 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை 800ஐ தாண்டி வருகிறது. ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து புதிய பகுதிகளிலும் கொரோனா பாதித்தவர்கள் கண்டறியப்படுகின்றனர். ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 14 நாட்களுக்கு மேல் புதிய தொற்று பதிவாகவில்லை என்று அந்த பகுதி கட்டுப்பத்தபட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்படும்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனையை அதிகப்படுத்த வேண்டும்.

இதைத் தவிர்த்து அடர்த்தி மிகுந்த பகுதிகள் மற்றும் குடிசைப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு உடனடியாக பரிசோதனை நடத்தி அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of