பெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது

1191

தமிழகத்தில் தினசரி பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் பெருந்தொற்று பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் 4 ஆயிரத்து 276 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 15 ஆயிரத்து 386ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 59 ஆயிரத்து 320ஆக உயர்ந்துள்ளது.

பெருந்தொற்று பாதிப்பில் இருந்து  8 லட்சத்து 72 ஆயிரத்து 415 பேர் குணமடைந்துள்ள நிலையில், 30 ஆயிரத்து 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் பெருந்தொற்றுக்கு நேற்று 19 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement