தமிழகத்தில் தற்போதைய பெருந்தொற்று நிலவரம்

488

தமிழகத்தில் மேலும் 569 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 8 லட்சத்து 34ஆயிரமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் பெருந்தொற்று பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 569 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 153 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 170 ஆக உயர்ந்துள்ளது.

பெருந்தொற்று பாதிப்பில் இருந்து 8 லட்சத்து 17 ஆயிரத்து 520 பேர் குணமடைந்துள்ள நிலையில், 4 ஆயிரத்து 984 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பெருந்தொற்றுக்கு நேற்று 7 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 316ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 56 லட்சத்து 40 ஆயிரம் பெருந்தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Advertisement