சி.பி.ஐ சோதனை: DGP டி.கே.ராஜேந்திரன் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசினார்

659

சி.பி.ஐ சோதனையை தொடர்ந்து டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது சோதனை தொடர்பாக முதலமைச்சரிடம் அளித்ததாக கூறப்படுகிறது.

குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலங்களில் சி.பி.ஐ. நேற்று சோதனை நடத்தியது. காலையில் தொடங்கிய சோதனை மாலையில் நிறைவடைந்தது.

இந்நிலையில் சி.பி.ஐ சோதனை நிறைவடைந்ததை தொடர்ந்து, தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முதலமைச்சர் பழனிசாமியை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் நேற்றிரவு சந்தித்தார்.

சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, சி.பி.ஐ சோதனை குறித்து விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக முதலமைச்சர் பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.