மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று ஆலோசனை

378

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த, மாநில ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள, மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இன்றைய கூட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடந்த குளறுபடிகள் குறித்தும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of