பதுக்கி வைத்திருந்த ரூ.38 லட்சம்..! கொத்தாக தூக்கிய பறக்கும் படை..! அதிமுக வேட்பாளரிடம் விசாரணை..!

951

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனை அருகே கமுதி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பாலு மற்றும் அவரது தந்தை தர்மலிங்கம் வசித்து வருகின்றனர்.

இவர்களில் மண்டலமாணிக்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பாலுவும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அவரது தாயார் ராணியம்மாளும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் பாலு மற்றும் தர்மலிங்கம் ஆகிய இருவரும் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்கு தங்களது வீட்டில் பணம் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவர்கள் இருவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த 38 லட்சத்து 63 ஆயிரத்து 300 ரூபாய் மற்றும் ஆயிரத்து 192 வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of