மாற்றுச்சான்றிதழில் இனி சாதி பெயர் குறிப்பிட வேண்டாம்.., தமிழக அரசு அதிரடி

1101

சில நாட்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ்கள் (TC) வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாற்றுச்சான்றிதழ் வழங்கும்போது, அதில் மாணவரின் ஜாதியை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வருவாய்த்துறை மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் சாதிச்சான்றிதழ் தனியாக வழங்கப்பட்டு வருவதால், டி.சி.யில் மாணவரின் சாதியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது மாணவரின் பெற்றோர், பாதுகாவலர் விருப்பப்பட்டால் சாதி இல்லை , சமயம் இல்லை என்று குறிப்பிட்டு டி.சி.யை வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜாதி தொடர்பான கேள்வியை நிரப்ப வேண்டாம் என்று மாணவர் தரப்பில் தெரிவித்தால் அந்த இடத்தை நிரப்பாமல், அவர்களுக்கு டி.சி.யை வழங்க பள்ளித்தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of