ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவே அதிமுக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது – ஸ்டாலின்

231

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, நாளை மாலை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட இருப்பது வரவேற்கத்தக்கது என்றும் நாளை கூடும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் அரசின் சார்பில் வைக்கப்படும் தீர்மானங்களை பொறுத்து கருத்துக்கள் முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். கஜா புயல் பாதிப்புக்கு தமிழக அரசு கேட்டிருக்கும் நிதியை அதிகப்படுத்தி மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதிமுக அரசு ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், அதிமுக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடப்பதாக கடுமையாக விமர்சித்தார். டெல்டா மக்கள் சோற்றுக்கே பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.